முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிலேயே முதன் முறையாக 3 அடி உயரம் உள்ள ஒருவருக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கிய தெலுங்கானா அரசு

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : நாட்டிலேயே முதன் முறையாக 3 அடி உயரமுள்ள ஒருவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் குகத்பள்ளியில் வசிக்கும் மூன்று அடி உயரமுள்ள ஷிவ்லால் (42) என்பவருக்கு, தானும் சாலைகளில் வாகனம் ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அவரது உயரம் மூன்று அடி என்பதால் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டது. காரணம், இவருக்கு யாரும் டிரைவிங் கற்றுக் கொடுக்க தயக்கம் காட்டினர்.

இந்நிலையில் தனியார் டிரைவிங் ஸ்கூல் மூலம் சமீபத்தில் டிரைவிங் கற்றுக் கொண்டார். அதையடுத்து அவருக்கு டிரைவிங் லைசென்சை போக்குவரத்து அதிகாரிகள் வழங்கியுள்ளனர். நாட்டிலேயே முதன் முறையாக மூன்று அடி உயரமுள்ள ஒருவர், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றவர் என்ற சிறப்பை ஷிவ்வால் பெற்றுள்ளார். தற்போது இவர், தனது மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்து வருகிறார். மேலும், சிறப்பு ஓட்டுநர் பள்ளியைத் திறக்க திட்டமிட்டுள்ளார்.

இதன்மூலம் இவரைப் போன்றவர்கள் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. இவரது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து