முக்கிய செய்திகள்

கண்மணி பாப்பா - இசை வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      சினிமா
Kanmani-Baba 2021 12 05

Source: provided

ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு, இசை சாய் தேவ். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். விழாவில் இயக்குனர் ஸ்ரீமணி பேசும்போது, கொடைக்கானல் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் முழு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இசை அமைப்பாளர் சாய்தேவ் இந்தப்படத்திற்காக நிறைய உதவிகள் செய்தார். எனக்கு என் மனைவி பெரிய சப்போர்டாக இருந்துள்ளார். அவருக்கு பெரிய நன்றி" என்றார். மேலும்,கண்மணி பாப்பா படம் எல்லோரது உழைப்பாலும் பெரிய படமாக மாறி விட்டது. இந்தப்படத்தை நான் தமிழில் மட்டும் தான் எடுத்தேன். ஆனால் தயாரிப்பாளர் சுந்தர் சார் இந்தி, தெலுங்கு என மூன்றாக மாற்றியிருக்கிறார் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து