முக்கிய செய்திகள்

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் - விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      சினிமா
Mohanlal 2021 12 05

Source: provided

சமூத்திரிகள் ஆளும் கோழிக்கோட்டில் தந்தையை இழந்த முகமதலி குஞ்ஞாலியாகிய மோகன்லால் பணக்காரர்களிடமிருந்து செல்வத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கும் ராபின் ஹுட்டைப் போல வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த நாட்டின் மீது போர்ச்சுகீசியர்கள் படையெடுக்கும் அபாயம் நேரும்போது, கொள்ளைக்காரனான குஞ்ஞாலிக்கு கடற்படைத் தளபதி பதவி கொடுக்கப்படுகிறது. அதனால் போர்ச்சுக்கீசியர்களை முறியடிக்கிறான் குஞ்ஞாலி. இதன் காரணமாக அரசவையில் அவனது மதிப்பு உயர்கிறது. இந்த நேரத்தில் குஞ்ஞாலிக்கு நெருக்கமான தளபதிக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் காதல் எல்லா சமன்பாடுகளையும் மாற்றிவிடுகிறது. இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை. குஞ்ஞாலியின் உண்மையான வரலாற்றிலிருந்து சற்று மாற்றி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகின்றன. மோகன்லால், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், பிரணவ் மோகன்லால் போன்ற நிறைய நடிகர்கள் இத்திரைப்படத்தில் இருக்கிறார்கள். எனினும் எந்தப் பாத்திரத்தையும் ரசிக்கவோ, ஒன்றிப்போகவோ முடியவில்லை. அந்நியரை எதிர்த்துப் போராடும் வீரனின் கதையில் ஒரு உத்வேகம் இருந்திருக்க வேண்டும்? ஆனால், அப்படியேதும் இதில் இல்லை. காட்சியமைப்பு, பின்னணி இசை, சண்டைக் காட்சிகள் மனதைக் கவர்கின்றன. ஆனால், திரைக்கதையில் உற்சாகம் இல்லையென்பதால் படம் பெரிதாக சோபிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து