முக்கிய செய்திகள்

இனி வாரத்தில் நான்கரை நாள் மட்டுமே வேலை : ஐக்கிய அரபு நாடுகள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      உலகம்
Arab-Emirates 2021 12 07

Source: provided

சவுதி : அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து வாரத்திற்கு நான்கரை நாள் மட்டுமே வேலை நேரம் இருக்கும் என ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. 

ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா , அபுதாபி, சார்ஜா, துபை, அஜ்மன், உம்-அல்-குவைன் மற்றும் புஜைராவில் வருகிற 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய பணி நேரம் அறிமுகமாக இருக்கிறது. அதன்படி , திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை 8 மணி நேர பணியும் , வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 வரை 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி , ஞாயிறு உள்பட 2.5 நாள்கள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் குடும்பத்தை கவனிக்கவும் இந்த புதிய பணி திட்டம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள்  மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.  தற்போது, அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை மட்டுமே விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து