முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதிக்கு பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்டும் விற்பனை: ஆந்திர மாநில அரசு முடிவு

சனிக்கிழமை, 11 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக, நாள்தோறும் 1,000 விரைவு தரிசன டிக்கெட்டுகளை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் டிக்கெட் எடுக்கும் போதே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.   இந்த புதிய திட்டத்தின்படி, ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருப்பதிக்கு டிக்கெட் எடுக்கும் போதே, கூடுதலாக ரூ. 300 செலுத்தி விரைவு தரிசன டிக்கெட்டையும் எடுத்துக் கொள்ளலாம். 

திருப்பதி திருமலையில், ஒவ்வொரு நாளும், காலை 11 மணிக்கும், மாலை 4 மணிக்கும், விரைவு தரிசனம் மூலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பேருந்து டிக்கெட்டுடன் விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, திருப்பதி பேருந்து நிலையத்திலேயே உதவி மையங்கள் செயல்படவிருக்கின்றன.

ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில், திருப்பதிக்கு சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களிலிருந்து நாள்தோறும் 650 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நகரங்களிலிருந்து பேருந்து மூலம் வருவோர், இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பேருந்து பயணத்துக்காக முன்பதிவு செய்யும் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகத்தின் இணையதளமும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி முதல் மாற்றப்படுகிறது. அதன்படி, இதுவரை பயன்படுத்தி வந்த www.apsrtconline.org.in இந்த இணையதளத்துக்குப் பதிலாக, பிப்ரவரி முதல் www.apsrtconline.in இந்த இணையதளம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து