முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கட்டண தரிசனத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தருவதா? - மாவட்ட கலெக்டரிடம் புகார்

செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொது தரிசன பக்தர்களுக்கு எந்த முக்கியத்துவமும் தராமல் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனத்துக்கு அனுமதிப்பதாக மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்ககம் சார்பில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் பிற மாவட்டங்களில் இருந்தும், மாநில அளவிலும் அதிகளவில் வந்து தரிசனம் செய்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் எந்தவித அறைகளும் இல்லை. மேலும் அந்த பக்தர்கள் குளிப்பதற்கு, கழிப்பறை செல்வதற்கு எந்தவொரு அடிப்படை வசதியும் சரியாக செய்து தரப்படவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக அவர்கள் வைத்துள்ள செல்போனை சார்ஜ் செய்வதற்கும் எந்த வசதியும் இல்லை. மிக முக்கியமான கட்டண தரிசனத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்களை அதிகநேரம் காக்க வைக்கிறார்கள். இது குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கும் புகார் மனு அனுப்பி உள்ளோம். அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 

அதே போல் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சிறிய அளவிலான தேங்காய் உடைப்பதற்கு அனுமதி தர வேண்டும். கோவிலுக்கு வரும் வெளிமாநில பக்தர்கள் தங்களுடன் வருபவர்களை பலமுறை தவற விட்டு விடுகிறார்கள். எனவே அவர்களை தேடி அலையும் நிலையும் உள்ளது. கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டண தரிசனத்தால் பல சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து