முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மீண்டும் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 28 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் நடை சாத்தப்பட்டது. மகரவிளக்கு விழாவுக்காக கோயில் நடை மீண்டும் 30-ம் தேதி திறக்கப்படும். தரிசனத்துக்காக பக்தர்கள் 31-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள். 

ஜனவரி 14-ம் தேதி மகர விளக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது. சபரிமலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் வாரியத் தலைவர் அனந்தகோபன் கூறுகையில்,

மண்டல பூஜை காலத்தில் நவம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை சபரி கோயிலுக்கு ரூ. 78.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 10.35 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.  கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்ததால் கோயிலுக்கு ரூ. 8 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. 2019-ல் கோயிலின் வருமானம் ரூ.156 கோடியாக இருந்தது என்று கூறினார்.

தேவசம் வாரிய அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்களுக்காக எருமேலியில் இருந்து பம்பை செல்லும் பாரம்பரியமான காட்டுப்பாதை திறந்து விடப்படும். வரும் 31-ம் தேதி முதல் பக்தர்கள் இந்தப் பாதையில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து