முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயில் திருக்குளங்களை சீரமைக்க முதல்வர் ஸ்டாலின் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்: அமைச்சர் கே.சேகர்பாபு தகவல்.

வியாழக்கிழமை, 30 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.  இந்நிகழ்வில் அமைச்சர் பேசும்போது, 

கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் ஏராளமான புகழ்பெற்ற பழமைவாய்ந்த. திருத்தலங்கள் உன்ளன. இந்த திருக்கோயில்களில் தரிசிக்கவும், புத்தாடைகள் எடுக்கவும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டத்திலிருந்தும், தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.அதனால் இங்கு அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வாகன நிறுத்துவதற்கான இடம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவிளால் தேர்வு செய்யப்பட்டுள்ளது, அதனை தற்போது பார்வையிட்டுள்ளோம்.

மேலும் இங்குள்ள பக்தர்கள் தங்கும்விடுதி கடந்த ஆட்சி காலத்தில் அவசர கோலத்தில் கட்டப்பட்டுள்ளது, இந்த புதிய கட்டிடத்திலேயே மராமத்து பணிகள் நிறைய செய்ய வேண்டியுள்ளது, அதுமட்டுமல்லாமல் இங்கு தங்குமிடத்தில் வாகன நிறுத்தம் மற்றும் அழகிய பூங்காக்கள், நீரூற்றுகள் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வரும் இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு, புதுப்பொலிவுடனான தங்கும் விடுதியாக முதல்வரால் விரைவில் திறந்து வைக்கப்படும்.

கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக பல திருக்கோயில்களுக்கு திருப்பணி ஆரம்பிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு கோயில்கள் திருப்பணிகள் முடிவடையாத நிலைதான் உள்ளது. இவையெல்லாம் ஆய்வு செய்யப்பட்டு திருப்பணிகள் விரைந்து முடித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

திருக்கோயில்கள் அனைத்திலும் உள்ள குளங்கள் சீரமைக்கவும் புதிய குளங்கள் உருவாக்கவும் தமிழக முதல்வர் கடந்த நிதிநிலை அறிக்கை என்பது 100 கோடி ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியை அடிப்படையாகக் கொண்டு குளங்கள் சீரமைக்கவும் அதனையொட்டி பூங்காக்களை அமைக்கவும் , திருத்தேர்கள் பராமரிப்பு பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 250 திருக்குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. பல திருக்கோயில்களில் புதிய குளங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது இவை அனைத்தும் இரண்டு ஆண்டுகளில் முடிவுற்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து