முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலுக்கு வெளியாகும் நாய் சேகர்

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சதீஷ் நாயகனாக அறிமுகமாகும் படம் நாய் சேகர். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம்  தயாரிக்க கிஷோர் ராக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நாயகன் சதீஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து படத்திற்கு தற்போது யு சான்றிதழ் கிடைத்துள்ளது. 2 மணி நேரம் 12 நிமிடங்களாக உருவாகியுள்ள இப் படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாய்க்கு, பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள சிவா தான் குரல் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படமும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு படங்களும் நாய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து