முக்கிய செய்திகள்

ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க அதிக குடியேற்றம்: அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      உலகம்
Robert 2022 01 12

ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் உள்நாட்டுத் தயாரிப்பில் தொய்வு, வெற்றிகரமான ஆற்றல் மாற்றத்துக்கு ஆபத்து போன்றவற்றை தவிர்க்க அதிக குடியேற்றம் தேவைப்படுவதாக அந்நாட்டு பொருளாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் நாடு தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நாங்கள் தற்போது சுமார் 3 லட்சம் வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறோம், இது மேலும் பல லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அமைச்சர் ராபெர்ட் ஹாபெக். 

இந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

க்ரீன்ஸ் கட்சியின் தலைவருமான ராபெர்ட் ஹாபெக் கூறுகையில், தொழிலாளர் தேவையை ஈடு செய்யாவிட்டால் உண்மையிலேயே நாம் உற்பத்தி பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.  தகுதி வாய்ந்த, வெளிநாட்டு தொழிலாளர்கள் ஜெர்மனி வந்து பணியாற்றுவதற்கு தற்போதிருக்கும் தடைக்கற்களை அகற்றி, தினக் கூலியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து