முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிப்பு: ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி கொரோனா தொற்று பரவி வருவதால் குறைந்தது 48 மணி நேரத்திற்கு போதிய மருத்துவ ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைமை செயலர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கொரோனா தொற்று மிகவும் வேகமாகபரவி வருவதால் போதுமான அளவு மருத்துவ ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அனைத்து மருத்துவமனைகளிலும் குறைந்தது 48 மணி நேரத்திற்கு மருத்துவ ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை அவர் பணிந்துள்ளர். திரவ நிலையில் உள்ள ஆக்சிஜன் அதற்கான கலன்களில் நிரப்பப்பட்டு, தடையின்றி விநியோகம்  செய்வதற்காக தயாராகா வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

நிரப்பப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை அனைத்து மருத்துவமனைகளிலும் தயாராக வைக்குமாறும், மீண்டும் நிரப்பும் வசதிகளை செய்திருக்க வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார். ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் சரியான முறையில் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். வெண்டிலேட்டர்கள், BIPAP, SPO2 உள்ளிட்ட உயிர்காக்கும் உபகரணங்களை தயார் நிலையில் வைக்குமாறும் மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து