முக்கிய செய்திகள்

கேப் டவுன் 3-வது டெஸ்ட்: 2-வது முறையாக அதிக பந்தில் அரை சதம் கடந்த விராட் கோலி

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      விளையாட்டு
Virat-Kohli 2022 01 12

கேப் டவுனில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான  3-வது டெஸ்ட் போட்டியில் 

2-வது முறையாக அதிக பந்தில் தனது அரை சதத்தை எடுத்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. அவர் மொத்தம் 158 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.

பேட்டிங் தேர்வு...

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார். புஜாரா 43 ரன்கள் எடுத்தார்.  தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 4, மார்கோ ஜேன்சன் 3, ஆலிவியர், நிகிடி, கேசவ் மகராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

28-வது அரை சதம்...

இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாவது முறையாக அதிக பந்தில் அரை சதம் கடந்துள்ளார். இது இவரது 28-வது அரை சதமாகும். விராட் கோலி 158 பந்தில் அரை சதம் கடந்தார். விராட் கோலி ஏற்கனவே 172 பந்தில் அரை சதம் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து