முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 கிராம் தங்க நாணயத்துடன் கூடிய திருமண நிதியுதவி வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

திருமண உதவித் திட்டங்களின் கீழ் 94,700 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை மாவட்ட பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கி தொடங்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டம் என்பது பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும், பெண்களின் திருமணத்திற்காக பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் அளிக்கும் வகையிலும், ஏழைப் பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள்,  மறுமணம் செய்து கொள்ளும்  விதவையர்,  ஏழை விதவையரின் மகள்,  கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்  ஆகியோர் பயன்பெறும் வகையிலும் செயல்படுத்தப்படும் தலையாயத் திட்டமாகும்.  இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவியும்  வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  தலைமைச் செயலகத்தில், சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை  வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள்  க.பொன்முடி, பி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூகநல இயக்குநர் ரத்னா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து