முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘புஷ்பா’ படம் அல்லு அர்ஜூன் கெட்டப்பில் ரவீந்திர ஜடேஜா

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பும்ராவை மறைமுகமாக சாடும் டேர்ல் ஸ்டெயின்

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ப்ரீ ஹிட் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டுவருவது டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்களை குறிவைத்து பந்துவீச்சாளர்கள் நோ-பால் வீசி வெறுப்பேற்றுவது தடுக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவி்த்துள்ளார். மறைமுகமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாள் ஜஸ்பிரித் பும்ராவை கட்டம்கட்டித்தான் டேல் ஸ்டெயின் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக டேல் ஸ்டெயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீ ஹிட்டை அறிமுகப்படுத்த வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ஒவருக்கு 7 முதல் 8 பந்துகள் அல்லது சிலநேரங்களில் 9 பந்துகள் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயமாக இது உதவுமா. டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்கள் டாப்-கிளாஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் மிரட்டல்விடுக்கும் பந்துவீச்சை கடைசி நேரத்தில் எதிர்கொள்வது சிரமம் அதிலிருந்து ப்ரீ ஹிட் காப்பாற்றும். இதுபற்றி ஸ்வரஸ்யமாக விவாதிக்கலாம். டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாகச் செல்கிறது. பும்ரா “நன்றாகப்பந்துவீசி” 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ” எனத் தெரிவித்துள்ளார்.

____________

ஜோகோவிச் விவகாரம் எதிரொலி: தாமதமான பட்டியல் வெளியீடு

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஒபன் வருகிற திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். அவரை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதுவரை அவருக்கு விசா விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று யார் யாருடன் மோதுவது என்பதை முடிவு செய்யும் வரைவு பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், ஜோகோவிச் விளையாடுவா? விளையாடமாட்டாரா?  என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதனால் போட்டி வரைவு பட்டியல் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

______________

கோலி - புஜாராதான் தலைவலி: தெ.ஆப்பிரிக்க வீரர் பீட்டர்சன்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது. இதனால் 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.  புஜாரா 9 ரன்னுடனும், விராட் கோலி 14 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர். இந்நிலையில், ஆட்டம் முடிந்ததும் செய்தி நிறுவனத்திடம் பேசிய கீகன் பீட்டர்சன் விராட் கோலியும் புஜாராவும் எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்தார். காலையில் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே எங்கள் இலக்கு. ஆனால் தற்போது களத்தில் உள்ள விராட் கோலி மற்றும் புஜாராவின் ஆட்டம் கடந்த சில போட்டிகளில் எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டன என தெரிவித்தார்.

_____________

கேட்சில் சதமடித்தார் கேப்டன் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் பவுமாவை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் விராட் கோலி. இது அவரது 100-வது கேட்ச் சாதனை ஆகும். விராட் கோலி 99 டெஸ்டில் 168 இன்னிங்சில் 100 கேட்ச் பிடித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 100 கேட்ச் பிடித்த 6-வது வீரர் விராட் கோலி ஆவார். ராகுல் டிராவிட் 163 டெஸ்டில் 299 இன்னிங்சில் (1996 முதல் 2012 வரை) 209 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார். வி.வி.எஸ். லட்சுமண் (135), தெண்டுல்கர் (115), கவாஸ்கர் (108), அசாருதீன் (105) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

___________

‘புஷ்பா’ படம் அல்லு அர்ஜூன் கெட்டப்பில் ரவீந்திர ஜடேஜா 

தனது இன்ஸ்டாகிராமில் ரவீந்திர ஜடேஜா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த டிசம்பர் 17-ம் தேதி, தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வரவேற்பைப்பெற்ற திரைப்படம் 'புஷ்பா: தி ரைஸ்'. தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியான இந்தப்படம் வசூல் சாதனைப் படைத்து வருகிறது. குறிப்பாக, அல்லு அர்ஜூனின் தாடி மீசையுடன் சற்று வித்தியாசமான கெட்டப் மற்றும் சாமி பாடலில் ராஷ்மிகா மந்தனாவின் நடனம் ஆகிய இரண்டும் வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

தற்போது நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த கெட்டப் கொண்ட தத்ரூபமான புகைப்படத்தை, ரவீந்திர ஜடேஜா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தை பதிவிட்டு பின்குறிப்பாக, “நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை என்றைக்குமே ஆதரித்ததில்லை. இப்படத்தில் நான் புகைப்பிடிக்கும் பீடி கிராபிக்ஸால் உருவாக்கப்பட்டது. புகையிலைப் பொருட்களை உட்கொள்வது மற்றும் பிடிப்பது உடல்நலத்திற்கு கேடானது” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ‘புஷ்பா’ பட வசனத்தை அல்லு அர்ஜூன் பாணியில் பேசும் வீடியோவை பகிர்ந்தநிலையில், தற்போது ரவீந்திர ஜடேஜாவின் இந்தப்புகைப்படம், சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து