முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு இரண்டறை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுகிறது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 24,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைக் கடந்து, அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் வேகமாகி வருகிறது.

கொரோனா மூன்றாவது அலையில் மீனா, த்ரிஷா, சத்யராஜ், அருண்விஜய், மகேஷ்பாபு, ஷெரின் உள்ளிட்ட நடிகர்கள் பாதிக்கப்பட்டனர். அதேபோல, மலையாள பட இயக்குநர் ப்ரியதர்ஷனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில், பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மலையாளப் படங்கள் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் மம்மூட்டி. அவர் வீட்டுத் தனிமையில் உள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அவர், நடித்துவந்த சி.பி.ஐ 5 திரைப்படத்தின் படப்பிடிப்பு 5 நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை சி.பி.ஐ. 5 திரைப்படக் குழு உறுதி செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து