முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணாமல் போன பிரபல நடிகை சாக்குமூட்டையில் பிணமாக மீட்பு

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

வங்க தேசத்தில் காணாமல் போன பிரபல நடிகை சாக்குமூட்டையில் பிணமாக மீட்கப்பட்டார்.

வங்காள தேசத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் ரைமா இஸ்லாம் ஷிமு (45). கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய அவர், 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டி.வி நாடகங்களிலும் நடித்துள்ளார். பார்டமன் என்ற படத்தில் அறிமுகமான அவர்,  தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார். வங்காள தேச திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினராகவும் இருந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன அவர், கடந்த திங்கட்கிழமை டாக்காவின் புறநகரில் உள்ள கெரனிகஞ்ச் ஹஸ்ரத்பூர் பாலம் அருகே சாக்குமூட்டைக்குள் பிணமாக கண்டுடெக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  கெரனிகஞ்ச் மாடல் காவல் நிலையத்தினர் நடிகையின் சடலத்தை மீட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.  நடிகையின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும், அவர் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டதாகவும், பின்னர் அவரது உடலை பாலத்தின் அருகே வீசப்பட்டதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.  

அவரது கணவர் ஷகாவத் அலி நோபல் மற்றும் கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது கணவர் ஷகாவத் அலி நோபல் கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டார். தற்போது, அவர் 3 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து