முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று அச்சம்: 2 ஆயிரம் வெள்ளெலிகளை கொல்லும் ஹாங்காங்

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

வெள்ளெலிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் சுமார் 2,000 எலிகளை கொல்ல ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது.

ஹாங்காங்கில் செல்லப் பிராணி கடை ஒன்றில் வெள்ளெலிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்தக் கடையின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். கொரோனா தொற்று ஏற்பட்ட எலிகளை ஏராளமான வாடிகையாளர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அக்கடையிலிருந்து எலிகளை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 7-ம் தேதிக்குப் பிறகே அந்தக் கடையிலிருக்கும் எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் 2,000 வெள்ளெலிகளை கொல்ல ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது. ஹாங்காங்கில் செயல்படும் பிற செல்ல பிராணி கடைகளில் சில நாட்களுக்கு விற்பனைகள் நடக்கக் கூடாது என்றும் அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது குறித்து ஹாங்காங் சுகாதாரச் செயலாளர் சோபிடா சான் கூறும்போது, இந்த எலிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா என்று இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதி செய்யவில்லை. இருப்பினும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து