முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரமணி Vs ரமணி புதிய சீசன் தொடக்கம்

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

குடும்ப டிராமா  என்ற அடிப்படைக் கருவில் நகைச்சுவை இணிப்புகள் தூவப்பட்டு, உருவாக்கப்பட்ட இத்தொடர், உலகளாவிய ரசிகர்களின் விருப்பமிகு தொடராக மாறிவிட்டது. இந்த தொடரின்  இரண்டு சீசன்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், இயக்குனர் நாகா மீண்டும் 'ரமணி Vs ராமனி 3.0' என்ற மூன்றாவது சீசனுடன் வந்துள்ளார். இந்தத் தொடரில் முன்னணி நடிகர் ராம்ஜி மீண்டும் மிஸ்டர். ரமணியாக நடிக்கிறார் மற்றும் வாசுகி ஆனந்த் மிஸஸ் ரமணியாக நடிக்கிறார். இவர்களது மகள் ‘ராகினி’யாக பொன்னி சுரேஷ் நடிக்க, மகன் ‘ராம்’ வேடத்தில் பரம் குகனேஷ் நடிக்கிறார். இந்த புதிய சீசன் குறித்து இயக்குனர் நாகா கூறுகையில், தாத்தா, பாட்டி, மகன்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு வேகமாக மறைந்து வந்தாலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த உறவினர்கள் செலுத்தும் வலுவான அன்பும் பாதிப்புகளும் எப்போதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அதனால் இன்றும் தனித்தனியாக வேறு வேறு இடங்களில் வாழ்ந்தாலும், கூட்டுக் குடும்ப மனநிலையில் தான் வசித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வாழும் குடும்பங்களுக்கு, வெளி உலகத்திலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தவிர, ஈகோ மோதல்கள், தலைமுறை இடைவெளிகள், டீனேஜ் துயரங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற அதன் சொந்த பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றையெல்லாம் அட்டகாசமான நகைச்சுவை பாணியில் சொல்ல வருகிறது இந்த ரமணி Vs ரமணி  புதிய தொடர். முதல் இரண்டு பாகங்களை தயாரித்த கவிதாலயா புரடக்சன்ஸ்னின் மின்பிம்பங்கள் இந்த மூன்றாவது சீசனையும்  தயாரித்துள்ளது. கோபு பாபு, பரத், விக்னேஷ்வரி ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனம் எழுத, சதீஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரெஹான் இசையமைக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து