முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம், மொளச்சூர் முருகன் கோவிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் வெள்ளிக்கவசங்களை வழங்கினார் சசிகலா

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

ஸ்ரீபெரும்புதூர் : காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள மொளச்சூர் முருகன் கோவிலுக்கு ரூபாய் 35 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்களை சசிகலா வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள மொளச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேய்வானை  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.  இங்கு தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரானா வழிகாட்டி நடைமுறை உள்ளதால் தைப்பூச தினமான நேற்று கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், நேற்று நடைபெற்ற தைப்பூச விழாவை யொட்டி இக்கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். 

இந்நிலையில் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நேற்று நடைபெற்ற தைப்பூச விழா சிறப்பு பூஜையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா கலந்துகொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகப்பெருமானுக்கு 35 லட்ச ரூபாய் மதிப்பில் 4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட வெள்ளி கவசத்தையும், தங்க கண் மலர்களையும் காணிக்கையாக வழங்கி சுவாமி தரிசனம் செய்தார்.

அருகில் இருந்த பொன்னியம்மன் கோவிலிலும் அம்மனை  தரிசனம் செய்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். இதன் தொடர்ச்சியாக பள்ள மொளச்சூர் பகுதியில் கட்டப்பட உள்ள பெருமாள் கோவிலுக்கு அடிகல் நாட்டி, ஆயிரம் பேருக்கு 10 கிலோ அரிசியை கொரோனா நிவாண உதவியாக வழங்கினார். இதில் அமுமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மொளச்சூர் பெருமாள் உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து