முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் தனியாக உலகை வலம் வந்து பெல்ஜியம் பெண் சாதனை

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

பெல்ஜியத்தைச் சோ்ந்த 19 வயதுப் பெண் ஸாரா ரூதா்போா்ட், விமானத்தில் தனியாக உலகை வலம் வந்து சாதனை படைத்துள்ளாா்.

சிறிய வகை விமானத்தில் 155 நாள்கள் பறந்து உலகை வலம் வந்த ஸாரா ரூதா்போா்ட், மேற்கு பெல்ஜியத்தில் கடந்த வியாழக்கிழமை தரையிறங்கினாா். அந்த வகையில், மிகச் சிறிய வயதில் உலகை வலம் வந்த பெண் என்ற சாதனையை அவா் படைத்துள்ளாா். இதற்கு முன்னா் கடந்த 2017-ம் ஆண்டு 30 வயதில் உலகை வலம் வந்த ஷாயெஸ்டா வாய்ஸ் என்ற அமெரிக்கப் பெண்தான் இந்த சாதனைக்குரியவராக இருந்தார். பிரிட்டனைச் சோ்ந்த டிராவிஸ் லுட்லோ என்ற 18 வயது இளைஞா் உலகை வலம் வந்த மிக இளம் வயது நபா் என்ற சாதனையை கடந்த ஆண்டு நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து