முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் நாளை வரை வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் மீண்டும் 3 நாட்களுக்கு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக கோவிலில் சாமி தரிசனத்திற்கு வார இறுதி நாட்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. குமரி மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி மீண்டும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம்  பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர். 

வார இறுதி நாளையொட்டி நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மீண்டும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள கோவில் பக்தர்கள் தரிசனத்திற்கு நேற்று அனுமதிக்கப்படவில்லை. கோவில் நுழைவாயில் மூடப்பட்டிருந்தது. நுழைவாயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.  தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் கோவில் வெளியே நின்று தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

இதேபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் வழக்கமான பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு இன்று மற்றும் நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தினமான 26-ந் தேதியும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. நேற்று முதல் நாளை (23-ம் தேதி) வரை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து