முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைக்கேல் படத்தில் இணைந்த வரலட்சுமி

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் உருவாகும், “மைக்கேல்” படத்தில் வரலட்சுமியும் இணைந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு,  கன்னடம், மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இந்நிலையில், தற்போது இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து