முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு மீண்டும் திருப்பதியில் நேரடி இலவச தரிசனம்: தேவஸ்தானம் ஆலோசனை

சனிக்கிழமை, 29 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதால் பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக தரிசன டிக்கெட்டுகள் வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 28 நாட்களுக்கு 3.36 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட அரை மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வரை 1.50 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வரை இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட்ட இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 15-ந் தேதி வரை மட்டுமே வெளியிடப்பட்டன.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகு திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக தரிசன டிக்கெட்டுகள் வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதனடிப்படையிலேயே நேற்று ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து