முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 ஆயிரம் கி.மீ. பயணித்த துரிதம் படக்குழு

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ஒரு செயல் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் மாறுபாடுகள் இருக்கும். இந்த கருத்தை மையப்படுத்தியும் உண்மைச் சம்பவம் ஒன்றை தழுவியும் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சீனிவாசன். 65 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக தமிழகத்துக்குள்ளேயே 40 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து சாலைகளில் மட்டுமே பெரும்பாலான காட்சிகளை  படமாக்கியுள்ளனர். படத்தின் கதையை பிரதிபலிக்கும் விதமாக படத்திற்கு 'துரிதம்' என்றே தலைப்பும் வைத்துள்ளனர். இயக்குனர் ஹெச்.வினோத்தின் உதவியாளரான இவரது படத்தில் சண்டியர் பட நாயகன் ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையால் இந்தப்படத்தின் தயாரிப்பாளராகவும் ஜெகன் மாறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து