முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 25 கோவில்களில் இந்த மாதம் கும்பாபிஷேகம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

புதன்கிழமை, 2 பெப்ரவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கோவில்களின் குடமுழுக்கு நன்நீராட்டு விழா இம்மாதம் (பிப்ரவரி) சிறப்பாக நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி சீனிவாச வரதராஜப் பெருமாள் கோவில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திருவழுதீஸ்வரர் கோவில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி செல்லப்பர் வகையறா கோவில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் விசுவநாதசுவாமி கோவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வளரொளீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றாங்கரை ஆனந்த வல்லியம்மன் கோவில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கரியகாளியம்மன் கோவில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில். பாபநாசம் தாமோதர விநாயகர் என்ற இரட்டைப் பிள்ளையார் கோவில், கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணபுரம் முத்தாரம்மன் கோவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்தாலம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு வருகிற 6-ம் தேதியன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சீனிவாச பெருமாள் கோவில் (வருகிற 11-ந்தேதி), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலந்தூர் வீரனார் மற்றும் அய்யனார் கோவில் (வருகிற 11-ந்தேதி), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் தட்டாரப்பட்டு தேவி குங்குமக் காளியம்மன் கோவில் (வருகிற 7-ந்தேதி), கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வட்டம் பெரிய கண்டியாங்குப்பம் வெண்மலையப்பர் கோவில் (11-ந்தேதி) பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் (11-ந்தேதி), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பாளுர் கல்யான சுந்தரியம்மன் கோவில் (20-ந்தேதி), 25-க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் குடமுழுக்கு நன்நீராட்டு விழா இம்மாதம் (பிப்ரவரி) சிறப்பாக நடைபெற இருக்கின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து