முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் மற்றும் முகம் அழகு பெற சித்த வைத்திய குறிப்புகள்;-

சனிக்கிழமை, 5 பெப்ரவரி 2022      சித்த மருத்துவ குறிப்புக்கள்

1. மேனி நிறம் பொன்நிறமாக ;- மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடியை 5 கிராம் அளவுக்கு  1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

2. தேகம் பொன்னிறமாக;- ஆவாரம் பூவை தொடர்ந்து சாப்பிடலாம்.

3. முகம் பளபளக்க ;- நாட்டு வாழைப்பழம் பழுத்தபழம் ஒன்றை எடுத்து ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்

4. முகச்சுருக்கம் மறைய ;-முட்டை கோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம்.

5. உடல் மினுமினுப்பாக ;-இரவில் படுக்க போகும் முன் தேன்,குங்குமப்பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.

6. உடல் நிறம் பளபளக்க ;-அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூள் ஆக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வரலாம்

7. உடல் வனப்பு உண்டாக ;-முருங்கை பிசினை பொடிசெய்து அரை ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

8. முகம் வசீகரமாக;-சந்தன கட்டையை எலுமிச்சை சாறில் உரைத்து பூசலாம்.

9. முகம் பிரகாசமடைய;-கானாவாழை மற்றும் மாவிலையை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அந்த நீரை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நெரம் கழித்து முகத்தை கழுவவும்.

10. மேனி பளபளப்பு பெற ;-ஆரஞ்சு பழத்தை தொடர்த்து சாப்பிட்டு வரலாம்.

11. தோல் வழவழப்பாக;மருதாணி இலையை அரைத்து கருப்பான தோல் உள்ள பூசி வந்தால் தோலின் கருப்பு நிறம் மாறும்.

12.உடல் சிகப்பாக மாற;-வெள்ளரிக்காய்,மஞ்சள் மற்றும் வேப்பம்பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர குணமாகும்.

13. உடம்பு பொலிவு பெற;-கோரை கிழங்கு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடம்பு பொலிவு உண்டாகும்.

14. முகம் அழகு கூட;-அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடிகட்டி பின் வெல்லம் சேர்த்து பருகி வர உடலழகும் முக அழகும் கூடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து