முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்தது

வியாழக்கிழமை, 10 பெப்ரவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து விற்பனையானது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலையும் அதிகரித்தது. எனினும் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதும் பின்னர் குறைவதும் என இருந்து வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலை நேற்று அதிகரித்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,601-க்கு விற்பனையானது. இதைபோல ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.36,808-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.66.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.66,800-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து