முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குதிரைவால் இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள குதிரைவால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பா.ரஞ்சித், கலையரசன், இசை அமைப்பாளர் பிரதீப்குமார், அஞ்சலி பாட்டீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன்  – ஷ்யாம் சுந்தர்  ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். ராஜேஷ் கதை எழுதியுள்ளார். இது அறிவியல் புனைவுப்படமாகவும், மேஜிக்கல்  சினிமாவாகவும் இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் இது புதிய முயற்சியாக இருக்கும் என நீலம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழி பிலிம்ஸ் சார்பாக  விக்னேஷ் சுந்தரேசன் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து