முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலங்கு விமர்சனம்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

விமல் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வெப் தொடரின் பெயர் விலங்கு. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில், ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ள இந்த வெப் தொடரை, எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் தயாரித்துள்ளார், இந்த வெப் தொடரில் இனியா, முனிஷ்காந்த், பாலசரவணன், ரேஷ்மா, ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் புருஷோத்தம்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 7 எபிசோடுகளோடு ஒரு புலனாய்வு தொடராக இந்த விலங்கு உருவாகியுள்ளது. திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையை திக்குமுக்காட வைக்கும் ஒரு மர்மமான வழக்கை, காவல்துறை அதிகாரியான விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அந்த விசாரணையில் ஏற்படும் திருப்பங்களே இந்தத் தொடர். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த ‘விலங்கு’ வெப் சீரிஸ் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து