முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் பங்குனி ஆராட்டு திருவிழா 9-ம் தேதி தொடங்குகிறது

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி ஆராட்டு திருவிழா வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக கோவில் நடை வரும் 8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்டது. 13-ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் இரவு அடைக்கப்பட்டது. 

இந்த நிலையில், பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 

மறுநாள் 9-ம்  தேதி ஆராட்டு திருவிழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றிவைக்கிறார். இதையொட்டி 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தினமும் ஸ்ரீபூதபலி, உத்சவபலி ஆகியவை நடைபெறும். 17-ம்  தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும்.  18-ம் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அதைத் தொடர்ந்து, 19-ம் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.  பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிப்பது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து