முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரஜன் அஜீத் நாயக் இணையும் புதிய படம்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

பிரஜன், ஆஜீத் நாயக் இருவரும் நாயகர்களாகவும் பிரகயா நயன், ரஷ்மி ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ்  சார்பில் S.V.சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சங்கர் - கென்னடி இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். படத்தின் இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் கென்னடி இருவரும் படம் பற்றி கூறுகையில், இப்படம் அரசியல் கலந்த கிரைம் திரில்லர் படம். தவறான அரசியல் வாதிகளின் ஆதிக்கத்தால் சாமானிய மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப் படுகிறார்கள் என்ற கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது என்றனர். இப் படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி, கன்யாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. படத்துக்கு ஒளிப்பதிவு - வினோத் குமார், இசை - விஜய் யாட்லீ, பாடல்கள் – கென்னடி, மக்கள் தொடர்பு - மணவை புவன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து