முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்ச் 18-ல் வெளியாகும் கள்ளன்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் வி.மதியழகன் தயாரிக்கும் படம் கள்ளன். இப்படத்தில் கதாநாயதாக இயக்குநர் கரு.பழனியப்பன் நடித்துள்ளார். அவருடன் நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். கே இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நா.முத்துக்குமார், யுகபாரதி, சந்திரா தங்கராஜ் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இந்த வாரம் இப்படம் வெளியாக உள்ளதை ஒட்டி படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் சந்திரா தங்கராஜ், இப்படம் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. 

வேட்டை சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன், இனிமேல் வேட்டையாடக்கூடாது என்று அரசு தடை போட்ட பிறகு வறுமையின் காரணமாக ஒரு தவறு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுகிறான். அந்த தவறு அவனது வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது. வாழ வழியில்லாமல் அவனும்,அவனது நண்பர்களும் ஓடுகிற ஓட்டத்தில் கடைசியில் 'அறம்'தான் வெல்லும் என்பதைப் பரபரப்பாகச் சொல்லுகிற ஒரு கமர்ஷியல் படம்தான் இது” என்று கூறினார். கடந்த 5 வருடங்களாக பல தடைகளை தாண்டி இப்படம் வரும் மார்ச் 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து