முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு கார் வழக்கில் நடிகர் விஜய் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய அரசு மனுதாக்கல்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : கார் தொடர்பான வழக்கில் நடிகர் விஜயின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று வணிகவரித்துறை மனுதாக்கல் செய்துள்ளது.

நடிகர் விஜய் 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து  சொகுசுகாரை இறக்குமதி செய்தார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியாக ரூ.7.98 லட்சம் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை தெரிவித்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வரியை செலுத்தாத காரணத்தினால், விஜய்க்கு காரின் நுழைவு வரி மற்றும் அபராதத்தொகை இரண்டும் சேர்த்து செலுத்தவேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது.

ஆனால், நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என்றும் அபராதத்தொகையை ரத்துசெய்யவேண்டும் என்றும், விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தமிழக அரசு பதில்மனு மனுதாக்கல் செய்துள்ளது. 

இதே போல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல்களின் இதே போன்ற பிற வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து