முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியிலிருந்து வந்தது பெருமாள் அணிந்த பட்டுப்புடவை

வியாழக்கிழமை, 17 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி அவர் அணிந்து கொள்ள திருப்பதி சீனிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து பட்டுப்புடவை நேற்று காலை வந்து சேர்ந்தது. 

ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் பல்வேறு அலங்காரங்களில் ஆண்டாளும், ரங்க மன்னாரும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு மண்டபங்களில் ஆண்டாள்-ரெங்கமன்னார் எழுந்தருளினர்.

இந்நிலையில் இன்று இரவு ஏழு மணி முதல் 8 மணிக்குள் ஆண்டாள் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று காலை திருப்பதியில் இருந்து தேவஸ்தான நிர்வாகிகள் சீனிவாசப் பெருமாள் அணிந்திருந்த பட்டு புடவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

திருப்பதியில் இருந்து சீனிவாச பெருமாள் அணிந்திருந்த பட்டு புடைவையை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்து உரிய மரியாதையுடன் பெற்றுக் கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துரஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து