முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளன் – விமர்சனம்

சனிக்கிழமை, 19 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

கரு.பழனியப்பன் ஹீரோவாக நடிக்க அறிமுக இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “கள்ளன்”. கதைக்களம் 1985களில் நடக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. நாயகன் கரு பழனியப்பன் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் காட்டில் வேட்டையாடும் தொழில் செய்து வருகின்றனர். வேட்டை செல்வதை வனத்துறையினர் கண்டித்ததால், திருட்டுத்தொழில், கள்ளத்துப்பாகி செய்தல் என பல குற்றங்களில் மூவரும் ஈடுபடுகின்றனர். ஒருகட்டத்தில், போலீஸாரால் மூவரும் கைது செய்யப்படுகின்றனர். இதில், முதல் குற்றவாளியான கரு பழனியப்பனுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதற்கிடையில், கரு பழனியப்பன் நாயகி நிகிதாவை சந்திக்க இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. இந்நிலையில் சிறையிலிருந்து கரு பழனியப்பனும் அவரது கூட்டாளிகளும். தப்பித்துச் செல்கிறார்கள். பின்னர் என்ன நடந்தது என்பது தான் கிளைமாக்ஸ். கரு பழனியப்பன் வேட்டைக்காரனாக மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகி நிகிதா, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார். நமோ நாராயணன் மற்றும் செளந்தர்ராஜா இருவரும் தங்களின் நடிப்பை மிரட்டலாக கொடுத்திருக்கிறார்கள். படத்தில் பெரிதும் கவர்ந்தவர் மற்றொரு நாயகி மாயா தான். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இவரால் ஏற்படும் திருப்பம் கதையை விறுவிறுப்பாக்கி விடுகிறது. தனது கண்களால் அனைவரயும் மிரட்டுகிறார். வேல ராமமூர்த்தியோடு ஆரம்பிக்கும் கதை நகர்வு அழகான கிராமத்து வேட்டை வாழ்வியலை கண்முன்னே நிறுத்தியதற்காகவே இயக்குனர் சந்திரா தங்கராஜை பெரிதாக பாராட்டலாம். பன்றி வேட்டையாடும் காட்சி, ஜெயிலில் இருந்து தப்பிச் செல்லும் காட்சி என பல இடங்களில் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது. கே இசையில் பாடல்கள் அருமை. கதைக்களம், வாழ்வியல், எடுக்கப்பட்ட விதம், என பலவற்றில் இயக்குனரின் கடுமையான உழைப்பிற்கு வெற்றி கிட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து