முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரியனார் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது : பக்தர்கள் திரளாக தரிசனம்

திங்கட்கிழமை, 21 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

கும்பகோணம் : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்துள்ள சூரியனார் கோவிலில் ராகு. கேது பெயர்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.  ராகுபகவான் ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வதை ராகுப் பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது. 

அதன்படி நேற்று ( 21-ம் தேதி) பிற்பகல் 3.13 மணிக்கு  ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி நேற்று முன்தினம் (20-ம் தேதி) இருகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு  யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாரதனையும் நடைபெற்றது.

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ராகு, கேதுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து