முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.39 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை !

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2022      வர்த்தகம்
Image Unavailable

தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்கும் பெண்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

உக்ரைன் - ரஷ்யா போரால் கடந்த மாத இறுதியில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே உள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ4.823-க்கு விற்பனை ஆனது. நேற்று இது ரூ.4,854ஆக உயர்ந்து விட்டது. பவுன் ரூ38 ஆயிரத்து 584-ல் இருந்து ரூ38 ஆயிரத்து 832 ஆக அதிகரித்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் கிராம் ரூ.31 ரூபாயும், பவுன் ரூ.248-ம் உயர்ந்து இருக்கிறது.

இதே போல் வெள்ளி விலையும் தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கிராம் ரூ.72.80-ல் இருந்து ரூ.73.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.72,800-ல் இருந்து 73,800 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்கும் பெண்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து