முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் பூ சாண்டி வரான்

சனிக்கிழமை, 26 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூ சாண்டி வரான் என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. JK விக்கி எழுதி இயக்கியுள்ள  இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணியை இயக்குநர் JK விக்கியே செய்துள்ளார். இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பிண்ணணியோடு உருவாக்கப்படுள்ள இந்த திரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசித்ததை போல தமிழக மக்களும் ரசித்து மகிழ்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது படக்குழு. இந்த படத்தில் பணியாற்றுவதன் மூலம் சினிமா பி.ஆர்.வோவாக தனது திரைப் பயணத்தை தொடங்கியிருக்கும் ஸ்ரீவெங்கடேஷ்க்கு வாழ்த்துக்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து