முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மத லீலை திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2022      சினிமா
Manmata-lilai 2022 04 04

Source: provided

மாநாடு படம் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் மன்மத லீலை. இப்படத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரேம் ஜி அமரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நாயகன் அசோக் செல்வன் 2010ல் ஆர்குட் மூலம் சம்யுக்தா ஹெக்டேவுடன் பழகுகிறார். ஒரு நாள் நேரில் சந்திக்க ஆசைப்படுகிறார் அசோக் செல்வன். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அசோக்செல்வன் சம்யுக்தாவை சந்திக்கிறார். அப்போது இருவரும் மது போதையில் தவறு செய்து விடுகிறார்கள். அதிகாலையில்   வீட்டிற்கு சம்யுக்தாவின் அப்பா வந்துவிடுகிறார். அதன் பிறகு 2020ல் மனைவி ஸ்மிருதி வெங்கட் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் ரியா சுமனுடன் இணைந்து தவறு செய்து விடுகிறார். மறுநாள் காலை ஸ்மிருதி வெங்கட் வீட்டிற்கு வந்துவிடுகிறார். 2010ல் சம்யுக்தா ஹெக்டேவின் வீட்டில் இருந்து அசோக் செல்வன் எப்படி தப்பித்தார்? 2020ல் தன் வீட்டில் இருந்து ரியா சுமனை எப்படி வெளியேற்றினார்? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகன் அசோக் செல்வன், காதல், பாசம், ரொமான்ஸ், பரிதவிப்பு, என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். முதல் பாதியில் ரொமான்ஸ், இரண்டாம் பாதியில் காமெடி என படம் நகர்கிறது. இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் அதிக கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் கதையை நகர்த்தி கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் அளவான நடிப்பை கொடுத்துள்ளனர். படத்தில் முதல் பாதியை விட இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக செல்கிறது. பிரேம்ஜியின் பின்னணி இசை மற்றும் தமிழ் அழகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து