முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2022      சினிமா
Arya 2022 04 04

Source: provided

Think Studios மற்றும் The Show People நிறுவனங்கள்  இணைந்து வழங்க, சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில்,  ஆர்யா நடிக்கும்  “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது.“டெடி” படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர், நம்பமுடியாத ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்க,  படக்குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளதாம். படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்யாவைத் தவிர இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து