முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 நாட்களாக ஏறுமுகம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2022      வர்த்தகம்
Gold 2021 11 23

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,872-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த 4 நாட்களாக ஏறுமுகமாக உள்ளது. கடந்த 4-ம் தேதி ஒரு பவுன் ரூ.38,480-க்கு விற்ற தங்கம் 5-ந்தேதி ரூ.38,600 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் அது ரூ.38,736 ஆக அதிகரித்து விற்பனை ஆனது.

இந்த நிலையில் நேற்றும் தங்கம் பவுனுக்கு ரூ.136 அதிகரித்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,872-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.17 அதிகரித்து ரூ.4,859-க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.71 ஆக விற்பனையானது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.71,000 ஆக விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து