முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் சூழல்தான் தி.மு.க ஆட்சியில் நிலவுகிறது: சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு பேச்சு

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Shekar-Babu-2022-04-07

தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் நல்ல சூழல், திமுக ஆட்சியில் நிலவுவதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், வினா- விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  12 ஆண்டுகள் கழிந்தும், ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களுக்கு, விரைவில் குடமுழுக்கு நடத்த, நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கேட்காததையும் செய்யும் அரசாக திமுக அரசு உள்ளது என்றும், தெய்வங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் நல்ல சூழல், திமுக ஆட்சியில் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், திருச்சி, மலைக்கோட்டை விநாயகர் கோவிலுக்கு ரோப்கார் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என கூறிய அவர், திருத்தணி முருகன் கோயிலில் மாற்றுப்பாதையில் ரோப்கார் அமைப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், மாநிலம் முழுவதும் 507 கோவில்களில், 907 பணிகள் ரூ.664 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், இன்னார் இனியவர் என்று பாராமல், யார் சிபாரிசு செய்தாலும் வேறுபாடு பார்க்காமல் பணிகளை செய்து தர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும், பகவதியம்மன் கோயிலில் முந்தைய ஆட்சியில் அனுமதி தரப்பட்டிருந்த எந்த பணிகளும் நிறுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து