முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா: வரும் 16-ம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
kallalager 2022 04 12

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவையொட்டி 16-ம் தேதி சனிக்கிழமை மதுரை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். 

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதுரையில் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் 16-ம் தேதி சனிக்கிழமை மதுரை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். அதேசமயம் கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் வங்கிகள் குறிப்பிட்ட அலுவலர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!