முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் புத்தாண்டு கோலாகலம்: தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Tamil-New-Year-festvel-2022-04-14

Source: provided

சென்னை: தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாக வரவேற்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக அதிகாலை முதலே பொதுமக்கள், கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு உள்ளிட்ட அறுசுவை உணவுகளை  படைத்தும், கனிகளை வைத்தும் மக்கள் வீடுகளில் வழிபட்டனர். 

சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோவில், வரதராஜபெருமாள் கோவில், ஏகாம்பரநாதர், கைலாசநாதர் கோவில், அஷ்டபுஜ பெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில் உள்ளிட்ட 196 கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமஞ்சனம், சந்தனகாப்பும் நடந்தது. அதிகாலையிலே குளித்து புத்தாடை உடுத்தி நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல கோவில்களில் அன்னதானம், பிரசாரம் வழங்கப்பட்டது. இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!