முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.ஜி.எப். விமர்சனம்

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2022      சினிமா
KGF 2022 04 18

Source: provided

கே.ஜி.எப். முதல் பாகத்தில் கே.ஜி.எஃபை கைப்பற்றிய நாயகன் அதை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார். இரண்டாம் பாகத்தில், கே.ஜி.எஃபை பறிக்க நினைக்கும் அரசியல்வாதிகள், ஹீரோவை அழிக்க நினைக்கும் வில்லன்கள் என எதிரிகளுக்கு பஞ்சமில்லாமல் படம் நகருகிறது. இறுதியாக எல்லாவற்றையும் முறியடித்து வெற்றி கண்டாரா  என்பதே கிளைமாக்ஸ். கன்னட சினிமாவின் போக்கையே மாற்றி பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகளில் அதிகமாக மெனக் கெட்டுள்ளார் நாயகன் யாஷ். ஸ்டைலிஷ், மாஸ் சீன்கள் என படமுழுக்க குறையில்லாமல் செய்துள்ளார். மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். டெக்னிக்கல் டீம்தான் படத்திற்கான உயிரோட்டமே, ஹாலிவுட் தரத்தில் இப்படம் உருவாகியிருக்க புவன் கவுடாவின் ஒளிப்பதிவு, கலை இயக்குனரின் மிரட்டும் செட் வொர்க், அன்பறிவின் சண்டை காட்சிகள், விறுவிறுப்பான எடிட்டிங், அதற்கேற்ற பின்னணி இசை, பரபரக்கும் ஆக்ஷ்ன் காட்சிகள், சவுண்ட் டிசைன் என அனைத்துமே இப்படத்தில் மிக நிறைவாக வந்துள்ளது. ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு இவர்களின் துணையுடன் உலகத் தரத்தில் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல். படத்தில் குறை என்று எடுத்துக் கொண்டால், முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் மற்றும் பில்டப் காட்சிகளாலுமே படம் நகர்வதால் ஒருவித சலிப்பு தோன்றுகிறது. வில்லன் சஞ்சய்தத்தின் கதாப்பாத்திரம் மிரட்டலாகவும் வலுவாகவும் உள்ளது. மொத்தத்தில் பிரமாண்ட மேக்கிங்கிற்காக கே.ஜி.எஃப். சேப்டர் 2 வை ஒரு முறை திரையரங்கில் கண்டு ரசிக்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து