முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ மை டாக் விமர்சனம்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2022      சினிமா
Oh-My-Dog 2022-04-23

Source: provided

சூர்யா ஜோதிகா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் ஓ மை டாக். அருண் விஜய், மகிமா நம்பியார், விஜயகுமார், அர்னவ் விஜய் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை - நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அருண் விஜய் மகிமா நம்பியாரின் மகன் அர்னவ் விஜய். தனது அப்பா விஜயகுமார் மற்றும் குடும்பத்தினருடன் ஊட்டியில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் கண் தெரியாத நாய் குட்டி ஒன்று அர்னவ் விஜயிடம் கிடைக்கிறது. அந்த நாயை நன்றாக வளர்த்து டாக் ஷோவில் பங்கேற்கச் செய்கிறான் அர்னவ். அங்கு நடக்கும் எல்லா சுற்றிலும் அர்னவின் நாய் வெற்றி பெறுகிறது. இது வில்லன் வினய்க்கு பிடிக்காமல் போக அவர் மிரட்டலில் ஈடுபடுகிறார். பிறகு நடந்த இறுதி போட்டியில் அந்த நாய் கலந்து கொண்டதா இல்லையா என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். முதல் முறையாக ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா,மகன்,பேரன் ஆகிய மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்த முதல் படம் என்கிற பெருமையைப் இப்படம் பெற்றிருக்கிறது. இந்த படம் அர்னவ் விஜய்க்கு முதல் படம். அவர் பல இடங்களில் ரசிக்க வைத்து இருக்கிறார். குடும்பத்தினரால் அடக்க முடியாத குறும்புகள், பள்ளி சேட்டைகள், நாய்க்குட்டியுடனான அன்னியோன்யம், வில்லனையும் மனம் மாற வைக்கும் தூய அன்பு ஆகிய எல்லாவற்றிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார் அர்ணவ் விஜய். மொத்தத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் பொழுது போக்கு படமாக அமைந்துள்ளது ஓ மை டாக்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து