முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோகோ கோலா, மெக்டொனால்ட் நிறுவனங்களை வாங்கும் எலான் மாஸ்க்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2022      உலகம்
tonalt-2022-04-28

Source: provided

வாஷிங்டன் : டுவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து கோகோ கோலா, மெக்டொனால்ட் நிறுவனங்களை வாங்க போவதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். 

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மாஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளார்.   இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மாஸ்க் டுவிட்டரில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். முதலில் கருத்து சுதந்திரம் குறித்து பேசிய அவர், டுவிட்டர் சமூக வலைதளத்தை மகிழ்ச்சியாகவே அதிகம் பயன்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கொகைனை அடைத்து வைப்பதற்காக கோகோ கோலா, மெக் டொனால்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை வாங்க போகிறேன் என்று கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள எலான் மாஸ்க், என்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும், பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க அரசியல் ரீதியாக டுவிட்டர் நடுநிலையாக இருக்க வேண்டும். நடுநிலையாக இருந்தால் தீவிர வலது சாரியோ, தீவிர இடதுசாரியோ கோபம்தான் அடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து