முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெல்ஜியம் சாக்லேட் மூலம் பரவும் புதிய தொற்று நோய் லண்டனில் 9 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2022      உலகம்
chocalate-2022-04-28

Source: provided

லண்டன் ; லண்டனில் 151 குழந்தைகளுக்கு சால்மோனெல்லா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 9 குழந்தைகள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

லண்டனில் பெல்ஜியம் சாக்லேட் மூலம் சால்மோனெல்லா நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 150 குழந்தைகள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 11 நாடுகளில் இந்தத் தொற்று பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக லண்டனில் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன் உள்ளிட்ட நாடுகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 9 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மரணம் எதுவும் பதிவாகவில்லை.

சால்மோனெல்லா நோய் என்பது பாக்டீரியா தொற்று ஆகும். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடல்களில் காணப்படுகிறது. டைபாய்டு காய்ச்சலும் இந்த பாக்டீரியா மூலம்தான் ஏற்படுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்ட 2 மணி நேரத்தில் காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும். தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் தீவிர நிலைக்கு செல்லாமல் தடுக்க முடியும். 

பசியின்மை, உடல்வலி, 104 டிகிரி வரை காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, தலைவலி உள்ளிட்டவைகள் இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். இந்த நோய் தரமற்ற உணவு மூலம் பரவுகிறது. குறிப்பாக மாசடைந்த உணவுப் பொருட்கள், பச்சையான பால் பொருட்கள், நன்கு வேக வைக்காத இறைச்சி ஆகியவைகள் மூலம் பரவுகிறது. தற்போது சாக்லேட் மூலம் இந்த நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து