முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் சண்டைக்கு இடையே உக்ரைனில் இரும்பு ஆலைக்குள் இருந்து மக்கள் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 2 மே 2022      உலகம்
Ukraine 2022 05 02

Source: provided

கிவ் : உக்ரைனில் இரும்பு ஆலைக்குள் இருந்து மக்கள் வெளியேறத்தொடங்கினார்கள் மரியுபோலில் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் மிகப் பெரிய இரும்பு தொழிற் சாலை இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும் உக்ரைன் ராணுவ வீரர்களும் இருக்கிறார்கள்.

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ந்தேதி போர் தொடுத்தது. கடந்த 68 நாட்களாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால் ரஷ்யா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

உக்ரைனின் கிழக்குப் பகுதியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா தாக்குதலை நடத்தியது. கிழக்கு உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளனர். அங்குள்ள மரியுபோல் நகரை கைபற்ற ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் அந்த நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது. மரியுபோலில் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் மிகப் பெரிய இரும்பு தொழிற் சாலை இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும் உக்ரைன் ராணுவ வீரர்களும் இருக்கிறார்கள்.

அவர்களை வெளியேற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதுவரை சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த இரும்பு தொழிற்சாலைக்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷ்ய வீரர்களை தாக்கி வருகிறார்கள். அவர்களை சரணடையு மாறு ரஷ்யா எச்சரித்தது. உக்ரைன் வீரர்கள் சரணடைய மறுப்பதால் அங்கு தீவிர சண்டை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து