Idhayam Matrimony

ஹாஸ்டல் விமர்சனம்

திங்கட்கிழமை, 2 மே 2022      சினிமா
Hostel-Review 2022 05 02

Source: provided

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஹாஸ்டல்’. போபோ சாஷி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மலையாளத்தில் 2015ல் வெளிவந்த வெற்றிப் படமான ‘அடி கப்பியாரே கூட்டமணி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘ஹாஸ்டல்’. அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். ஆண்கள் ஹாஸ்டலில் நாயகி பிரியா பவானி சங்கர் இரவோடு இரவாக நுழைகிறார். ஹாஸ்டலுக்குள் சென்ற பிரியா பவானி சங்கர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொள்கிறார். அவரை யார் கண்ணிலும் படாமல் வெளியே அனுப்ப அசோக் செல்வன் முயற்சி செய்கிறார்.இறுதியில் ஹாஸ்டலில் இருந்து பிரியா பவானி சங்கர் எப்படி வெளியேறினார் அவர் ஹாஸ்டலுக்குள் செல்ல காரணம் என்ன? என்பதே இந்த படத்தின் மொத்த கதை. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வன் இந்த முறை தவறாக கதையை தேர்ந்தெடுத்து விட்டார் என்றே சொல்லலாம். அசோக் செல்வன் நண்பர்களாக வரும் சதீஷ், கேபிஒய் யோகி, கிரிஷ் குமார் ஆகியோர் கடமைக்கு வந்து சென்றுள்ளனர். நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் காமெடி எடுபடவில்லை. முனீஸ்காந்த் மற்றும் ரவிமரியாவின் காமெடி காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைத்துள்ளனர். போபோ சாஷியின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் ஹாஸ்டல் – கரைக்டான  சொதப்பல் படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து